அஜித் கரியரில் முக்கியமான படமான ‘மங்காத்தா’ நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு, தியேட்டரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதிய படத்தை போல கொண்டாடப்படும் ‘மங்காத்தா’ வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்தும் இந்த படத்துக்கான கொண்டாட்டம் வெறித்தனமாக உள்ளதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ‘மங்காத்தா’ படத்தில் பணியாற்றியது தனக்கு பெருமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

