Skip to content

தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு

திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் தன்னைத் தானே செதுக்கும் விதமாக

தொழிலாளர் சிலையை அனிகா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது. இதனை கோவை கலெக்டர் பவன் குமார் மற்றும் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தனர். இந்த சிலை வாகன ஓட்டிகளை கண் கவர செய்துள்ளது.

error: Content is protected !!