Skip to content

கரூர்-துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி.. பரபரப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டுமுன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு க.பரமத்தி போலீசார் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிணவறையில் உடற்கூறு ஆய்வு செய்த பிறகு கரூர் பாலாமாபுரம் மயானத்தில் 28.04.2025 உடல் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலையத்தில் நபர் ஒருவரை காணவில்லை என்ற புகாரில், கரூருக்கு வந்து பீளமேடு போலீசார் பார்வையிட்டபோது, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (47) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கரூர் வட்டாட்சியர் குமரேசன் முன்னிலையில் சிகாமணியின் உடல் மறு கூறாய்வு செய்து வருகின்றனர். பீளமேடு மற்றும் சரவணம்பட்டி காவல்துறையினர் தற்பொழுது சம்பவ இடத்தில் உள்ளனர்.

சிகாமணிக்கும், கோவையை சேர்ந்த சாரதா என்பவருக்கும் இருந்து வந்த கள்ளக்காதல் காரணமாக சிகாமணிக்கு கொடுத்த ஆறு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் இருந்ததன் காரணமாக கள்ளக்காதலியே சதித்திட்டம் தீட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கொலை வழக்கில் உடந்தையாக இருந்த தியாகராஜன் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாரதா மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!