அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.முதல் முறையாக ஒரு டாலருக்கு ரூ.90-த் தாண்டியுள்ளது. அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின் ரூபாய் மதிப்பு மீட்சியடையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த டாலர்–ரூபாய் (USD/INR) விகிதம் 90 ரூபாய் தாண்டி உயர்ந்திருப்பது இந்தியாவுக்கு பல முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தும். ரூபாய் பலவீனப்படுவது இந்தியாவுக்கு என்ன பிரச்சினைகள்?
இறக்குமதி (Import) பொருட்கள் விலையேறும்
இந்தியா வாங்கும் முக்கிய பொருட்கள்:
- கச்சா எண்ணெய் (Crude Oil)
- எலக்ட்ரானிக்ஸ்: மொபைல்கள், லாப்டாப்கள், சிப், TV
- தங்கம்
- இயந்திரங்கள், ரசாயனங்கள்
டாலர் அதிகரித்தாலே இந்த பொருட்களின் இறக்குமதி செலவு கூடும். ஆகவே இந்தியாவில் உள்ள மக்களுக்கும் விலையேற்றம் ஏற்படும்.

