செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த அம்மனூர் கிராமத்தில் வசித்து வருபவர் சுபாஷ் வயது – 27. சுபாஷின் பெரியப்பா மகனாகிய சுரேந்தர் என்பவர் நேற்று இரவு 1 மணி அளவில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷை அவசர வேலை காரணமாக வெளியில் செல்ல வேண்டும். என்னை உன்னுடைய இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல் என்று கூறி சுரேந்தர் சுபாஷை அழைத்தான். உடனே சுபாஷ் சுரேந்தரை அவருடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செய்யூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த சுரேந்தர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுபாஷின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு சுரேந்தர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மகனை காணவில்லை என சுபாஷின் தகப்பனார் தேடிச் செல்லும் பொழுது கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் சாலையில் இறந்த நிலையில் கிடந்த சுபாஷின் உடலை பார்த்து கதறி அழுத உறவினர்கள், உடனே செய்யூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த சுரேந்திரை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சுரேந்தர் சுபாஷை ஏன் கொலை செய்தார் என்ன காரணம் என்னவென்று பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மனூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் ஆனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது