Skip to content

எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தியேட்டர் ஊழியர் பலி..

சென்னை இராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், பிவிஆர்-எஸ்கேப் தியேட்டரில், புரஜெக்டர்களை எடுத்துச் செல்ல உதவும் ஹைடிராலிக் லிப்ட் பரமாரிப்பு பணி நடைபெற்றது.அப்போது திடீரென ஹைட்ராலிக் இயந்திரம் மேல்நோக்கி சென்றதால், கட்டடத்தின் மேல்தளத்தில் மோதி நசுங்கி சம்பவ இடத்திலேயே பராமரிப்பாளர் பலியானார்.

ஹைடிராலிக் லிப்ட் திடீரென இயங்கி, மேற்கூரை மீது தியேட்டர் ஊழியர் ராஜேஷ் தலை மோதி உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை. ஹைடிராலிக் லிப்ட் திடீரென இயங்கி, தனது கணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ராஜேசின் மனைவி தேவிகா போலீசார் புகார்.

இயந்திரங்களை அலட்சியமாக பயன்படுத்துதல், அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு .பிவிஆர்-எஸ்கேப் தியேட்டர் பணி பொறுப்பாளர் பிரபாகரன், மூத்த இன்ஜினியர் தனசேகரன் ஆகியோரை பிடித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தினர் .

error: Content is protected !!