புதுக்கோட்டை மாநகராட்சி மருதுபாண்டியர் நகரப்பகுதியில் வசித்து வருபவர் பிரேம் ராஜ்.இவர்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பொது மேலாளராக
பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் இவரது மனைவி நிர்மலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இன்று அதிகாலை அவரது வீட்டிற்குள்
புகுந்த மர்ம நபர்கள் நிர்மலாவை கீழே தள்ளி அவர் கழுத்தில் கிடந்த நாலரை பவுன் தங்கநகைகள்மற்றும் பீரோவில் இருந்த ரொக்க ம்ரூ 40ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு ஓடிவிட்டனர்.
அதன்பிறகு சுதாரித்து எழுந்த நிர்மலா (செவித்திறன்குறைபாடு உடையவர்.) அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல்தெரிவித்தார்.
இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா
வந்து பார்வையிட்டார்.