Skip to content

திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்னை இல்லை… திருமா பேட்டி

ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயக்கக்கோரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயக்கக்கோரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் வரும் 9 ஆம் தேதி சென்னையில் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் வரும் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ், தேமுதிக வந்தால் பிரச்சனை இல்லை. கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரெல்லாம் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும். ஓபி.எஸ், தேமுதிக, திமுக கூட்டணிக்கு வந்தால் விசிகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஓபிஎஸ் பாஜகவின் பிடியிலிருந்து வந்ததே மகிழ்ச்சி தான். கூட்டணி கட்சிகள் நல்லிணக்கத்தோடு தொகுதிகளை பிரித்து கொள்வோம், அதில் பிரச்சனையில்லை” என்றார்.

error: Content is protected !!