பாஜ.,வினரை கைது செய்ய கோரி 31ம் தேதி ஆர்பாட்டம்…. திருமாவளவன்

96
Spread the love

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது….. இந்த ஆண்டிலேயே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். பாஜகவினர் பலரும் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். பெண்களை பற்றி தவறாக கூறி வருகின்றனர். அவர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் நான் பேசியதை திரித்து அவமதிக்கும் வகையில் என்னை பற்றி தவறாக பேசி வருகின்றனர். என் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY