Skip to content

திருப்பதி பிரமோற்சவ விழா: செப்.24ல் கொடியேற்றம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மாதம் 24-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 23-ந்தேதி பிரம்மோற்சவ அங்குரார்ப்பணம், 24-ந்தேதி கொடியேற்றம், 28-ந்தேதி ‘சிகர’ நிகழ்ச்சியாக கருட வாகன வீதிஉலா (கருடசேவை), அக்டோபர் மாதம் 1-ந்தேதி தேரோட்டம், 2-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது. தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடக்கின்றன.

பிரம்மோற்சவ விழாவில்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள் என்பதால் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் ,  சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கான தரிசனம், கோவிலுக்கு காணிக்கை வழங்கிய காணிக்கையாளர்களுக்கான தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

தேவையான அளவு லட்டு இருப்பு வைக்கவும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!