திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருநாத முதலியார் தெரு பகுதியில் உள்ள சுகுமார் என்பவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஜின்னா ரோடு பகுதி மற்றும் பழனிச்சாமி ரோடு பகுதி உள்ளிட்ட இரண்டு இடங்களில் நகைக்கடை உள்ளது. மேலும் திருப்பத்தூரில் பிரபல நகைக்கடை என்பதால் வரியைப்பு

செய்திருக்கக்கூடும் என்ற காரணத்தால் கடையின் உரிமையாளர் சுகுமார் வீட்டில் அண்ணா நகர் பகுதியில் உள்ள மத்திய கலால் அலுவலகத்தில் இருந்து மத்திய கலால் துணை ஆணையர் அஜித்குமார் தலைமையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் (ஜிஎஸ்டி) சுங்க தொடர்பு துறை குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் குழுவினர் வெளியே வந்த பின்புதான் ஏதாவது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா? மேலும் வரி ஏய்ப்பு ஏதாவது செய்தார்களா? என தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

