Skip to content

திருவானைக்காவலில் கலங்கலாக வரும் குடிநீர்- பொதுமக்கள் புகார்

  • by Authour
திருச்சி மாநகராட்சி மண்டலம் 1 க்குட்பட்ட நெல்சன் ரோடு பகுதியில் இன்று காலை மாநகராட்சியால் வழங்கப்பட்ட குடிநீர் மிகவும் கலங்கலாக தூசுகளுடன் வந்தது.இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த தண்ணீரை பாட்டிலில் பிடித்து பார்த்தபோது  கழவு நீருடன்  கலந்து வருவது போல தெரிந்தது.  இது குறித்து  அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தனர்.  நேற்று மாலையும் இதுபோல கலங்கலாக வந்ததாக சிலர் கூறினர். கடந்த சில தினங்களுக்கு முன் உறையூரில் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் வந்ததாகவும், அந்த குடிநீர் குடித்ததால்   3 பேர் இறந்து விட்டதாகவும்  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.  பின்னர் அதிகாரிகள் வந்து அங்கு ஆய்வு நடத்தி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்  செய்தனர். திருவானைக்காவல் பகுதிக்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து குடிநீர் வரும் பாதையை ஆய்வு செய்து  குடிநீர் கலங்கலாக வருவதற்கான காரணத்தை அறிந்து  நடவடிக்ை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    
error: Content is protected !!