Skip to content

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்- பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!

விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ரிலீஸ் தேதி மாற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ்பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது அவரது 100-வது இசைப் படமாகும். 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் அண்ணன்-தம்பியாக நடிக்கின்றனர்.படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படத்தின் சாரம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் 1960-களின் செட் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

விஜய் இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ள நிலையில் அவரது கடைசி படத்தை கொண்டாட ரசிகர்களும் தவெக தொண்டர்களும் தயாராகி வருகின்றனர். இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் படம் வெளியாக இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கோட்’ படத்தில் விஜய் சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கி கொடுத்த காட்சி இப்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

error: Content is protected !!