Skip to content

புதுகை மாநகராட்சியில் நியமன உறுப்பினராக தியாகு பொறுப்பேற்பு

புதுக்கோட்டை நவ 30- புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 42 மாமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் தற்போது புதிதாக நியமன உறுப்பினராக மாற்றுத்திறனாளி அ.தியாகு தமிழக அரசால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதற்கான நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் ஏற்றார்.இந்த நிகழ்வில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத்அலி, ஆணையர் நாராயணன் மாநகர கவுன்சிலர் சுப. சரவணன், கனகம்மன்பாபு அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!