Skip to content

தொழுநோய் ஒழிப்பு பேரணி…. அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மைக்ரோ பாக்டீரியம் என்னும் கிருமியால் வரும் தொழு நோயை ஒழித்து தொழு நோய் இல்லா உலகை உருவாக்க கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் துவங்கி வைத்தார். இதில் தொழு நோயின் அறிகுறிகளான சிவந்த அல்லது மெலிந்த உணர்ச்சியற்ற

அரிப்பில்லாத தேமல், காது மடல்கள் தடித்திருத்தல் மற்றும் கொப்புளங்கள், நரம்புகள் தடித்து செயலிழந்து இருத்தல், கை கால்களில் மரமரப்பு போன்ற தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழு நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும் முழக்கமிட்டும் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். தொழுநோய் விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற விழிப்புணர்வு பேரணியானது ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதில் மருத்துவப் பணி தொழுநோய் இணை இயக்குனர் சங்கரி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் கந்தையா உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!