Skip to content

இந்தியாவுக்குள் நுழைந்து மாடுகளை கடத்த முயற்சி… வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துக்கொலை

இந்தியா – வங்காளதேசம் பல கிலோமீட்டர்களுக்கு எல்லைகளை பகிர்கின்றன. அதேவேளை, வங்காளதேசத்தினர் பலரும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ளனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
திரிபுரா மாநிலம் வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தின் கொவாய் மாவட்டத்தில் பிட்யாபல் என்ற கிராமத்திற்குள் நேற்று முன் தினம் இரவு வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்துள்ளது. அந்த கும்பல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளது. பிட்யாபல் கிராமத்திற்குள் நுழைந்த கும்பல் அங்கிருந்த மாடுகளை கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இதைக்கண்ட கிராமத்தினர் அந்த கும்பலை தடுக்க முயன்றபோது அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கிராமத்தினரை கடுமையாக தாக்கினர்.

இந்த தாக்குதலில் கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் வங்காளதேச கும்பலை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் வங்காளதேசத்தினர் 3 பேர் அடித்துகொல்லப்பட்டனர்.  தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!