துவாக்குடி 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் 9ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெறுகி்றது. எனவே இந்த நிலையத்திலிருந்து மின் விநியோகம்
செய்யப்படும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக்,
M.D.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் C- செக்டார் மற்றும்
A,B,ER & PH செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம் (NIT), துவாக்குடி மற்றும் துவாக்குடி
தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில்
காலை 9:45 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடுமின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாள M.கணேசன் தெரிவித்துள்ளார்.