கோவை மாவட்டம், வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ளது அண்டை மாநிலமான கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த அதிரப்பள்ளி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம் குறிப்பாக வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிர பள்ளியையும் சுற்றி பார்க்க செல்வது வழக்கம். இந்நிலையில் வால்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இங்கு யானை, சிறுத்தை, புலி என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும்.,
குறிப்பாக கடந்த சில நாட்களாகவே கபாலி என்கின்ற ஒற்றை காட்டு யானை அதிரப்பள்ளி சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து சுற்றுலா பயணிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் சுற்றுலா பயணிகள்
சாலையில் தேவை இன்றி வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ அவைகளை துன்புறுத்தவோ கூடாது என கூறி பாதுகாப்பாக செல்ல வேண்டும் என தமிழக மற்றும் கேரளா மாநில வனத்துறையினர் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியதோடு ரோந்து பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.,
இந்நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழியில் புலி ஒன்று மானை வேட்டையாடி சாலையில் இழுத்து சென்றுள்ளது இப்போது அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் இதை தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த வீடியோவானது வைரலாகி வருகிறது. மேலும் தற்போது வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில் சில பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.