Skip to content

பொதுமக்களை அச்சுறுத்திய புலி கூண்டில் சிக்கியது

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வடசேரி கும்பலா பகுதியில் புலி ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வீடுகளில் இருந்த செல்லப் பிராணிகளை வேட்டையாடியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.
இந்த நிலையில், புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதன்படி, அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!