கரூர் மாவட்டம்,குளித்தலை தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் காமராஜ் அவர் புதிய வீடு கட்டுமான பனிக்காக எம்.சாண்ட் (இயற்கை மணல்) புக்கிங் செய்துள்ளார்.
இந்நிலையில் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் பாஸ்கர் (32) லாரியை ஓட்டி வந்துள்ளார் அய்யர்மலையில் உள்ள மணல் குவாரியில் எம்.சாண்ட் ஏற்றிக் கொண்டு தெற்கு மணத்தட்டை காமராஜ் வீட்டிற்கு வருவதற்காக லாரியை குறுகிய பாதை வழியாக இயக்க
முயன்றுள்ளார் எதிர்பாராத விதமாக லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் லாரியின் அடியில் சிக்கி கொண்டவரை மீட்க முசிறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்து 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிரேன் உதவியுடன் பலத்த காயங்களுடன் பாஸ்கரின் உடலை மீட்டு குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைகாக கரூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.