Skip to content

திருப்பத்தூர்… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்- 155 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தேசிய கொடி ஏற்றினார்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் சமாதான புறாவை பறக்கவிட்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர்

சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 28 பேருக்கும் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த 309 பேருக்கு அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த சுதந்திர தின விழா 2025 ஆம் ஆண்டிற்கான நலத்திட்ட உதவிகள் 155பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!