Skip to content

திருப்பத்தூர், வீட்டில் புகுந்த கரடி கூண்டுவைத்து பிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள செத்தமலை பகுதியில் இருந்து இரண்டு குட்டி கரடிகள் ஒரு தாய் கரடி என மூன்று கரடிகள் விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளது.

அப்போது அங்கு விவசாய நிலத்தில் பருத்தி எடுத்து கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண்ணை கரடி கடித்துள்ளது. அதன்பின் அங்கு உடன் பணி புரிந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இரண்டு குட்டி கரடிகள் மீண்டும் மலைப்பகுதிக்குள் சென்ற நிலையில் பெரிய தாய்கரடி மட்டும் பேட்டராயன்வட்டம் பகுதியில் உள்ள ராமி என்பவரின் வீட்டில் புகுந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரி சம்பத், வனசரகர் குமார், வனவர் சங்கரன் மற்றும் நாட்றம்பள்ளி காவல் நிலைய போலீசார்  வலை அமைத்து கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் காட்டுப்பகுதியில் இருந்து வந்த கரடி விவசாய நிலத்தில் பருத்தி எடுத்து கொண்டிருந்த பெண்ணை கடித்து  குதறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீட்டிற்குள் கரடி புகுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமும் பிதியும் அடைந்துள்ளனர்.

மேலும் கரடியை பிடிப்பதற்காக கூண்டு எடுத்து வருவதற்கு காலதாமதம் ஆகுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

error: Content is protected !!