Skip to content

திருப்பத்தூர்…. அரசு பள்ளியில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மிதிவண்டி நிறுத்துவதற்கு போதுமான வசதி இல்லை எனவும் மேலும் மிதிவண்டி நிறுத்தும் இடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் சுற்றி திரிவதாகவும் இதனால் பாதுகாப்பான மிதிவண்டி நிறுத்தமிடம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் இன்று நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்கும் பணியினை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் நகர சேர்மன் சங்கீதா வெங்கடேசன். துணைச் சேர்மன் ஏ ஆர் சபியுல்லா. முன்னாள் சேர்மன். பொதுக்குழு உறுப்பினர். அரசு. சார்லஸ் நவீன் குமார்.பார்த்திபன் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் செழின் ஏஞ்சல் மேரி மற்றும் ஆசிரியர்கள், திமுக கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பொதுமக்கள் பலரும் உடன் இருந்தனர்.

error: Content is protected !!