Skip to content

திருப்பத்தூர்… கல்லூரி மாணவிக்கு ”ப்ரொபோஸ்” … ஆய்வக உதவியாளர் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வரும் நிலையில்,தனியார் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (27) என்பவர் ஆறு மாத காலமாக பணிபுரிந்து வந்துள்ளார்,

கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மைனர் பெண்ணுக்கு ஆய்வக உதவியாளர் நவீன் குமார் காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மைனர் பெண்ணை நவீன் குமார் காதலிக்கிறேன் என ப்ரொபோஸ் செய்துள்ளார். சிறுமி இது நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர் சிறுமி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் நவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மைனர் பெண்ணுக்கு ப்ரபோஸ் செய்த ஆய்வக உதவியாளர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

error: Content is protected !!