Skip to content

திருப்பத்தூர்… கலெக்டர் அலுவலகம் முன்பு மயங்கி விழுந்து டிரைவர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் அம்பேத் (35)  இவருக்கு திருமணம் ஆகி ‌ இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளன. இவர் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் வழக்கம்போல விடியற்காலை 3 மணி அளவில் வாடகைக்கு டிரேக்டர் ஓட்ட  திருப்பத்தூருக்கு வந்துள்ளார்.  அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்து உள்ளார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உறவினருக்கு தகவல் சொல்ல அங்கிருந்து விரைந்து வந்த உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர் மேலும் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  திருப்பத்தூருக்கு வேலைக்கு வந்த ஓட்டுநர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

error: Content is protected !!