திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியை சேர்ந்த தில்ஷாத் என்பவரின் 2 வது மகள் நிஸ்பா (7) திருப்பத்தூர் நகரத்தில் உள்ள பூங்கா அரசு பள்ளியில் படித்து வரும் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் 1ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம் ஆகிய இரண்டு நாணயங்களை வைத்து கொண்டு விளையாடி கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில் வாயில் போட்டு கொண்டு அந்த சிறுமி விளையாடிய போது 2 காசுகளும் தொண்டையில் சிக்கி உள்ளது. இதனால் அந்த குழந்தை அழுது கொண்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது நல்வாய்பாக சில்லரை உணவு குழாயில் சிக்கி இருந்துள்ளது. மருத்துவர்கள் இதனை சுதாரித்துக் கொண்டு குழந்தைக்கு மயக்க ஊசி செலுத்தி அறுவை சிகிச்சை அரங்கில் 2 காசுகளையும் வெளியே எடுத்து உள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர்கள் நிம்மதி பெரும் மூச்சு அடைந்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
2 காசுகளை விழுங்கிய 2ம் வகுப்பு பள்ளி மாணவி… காப்பாற்றிய திருப்பத்தூர் அரசு டாக்டர்கள்..
- by Authour
