Skip to content

கஞ்சா-கள்ளச்சாராய விற்பனையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை… திருப்பத்தூர் புதிய எஸ்பி

திருப்பத்தூரில் ஆறாவதாக பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பொறுப்பேற்று கொண்டார். திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இவரை 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆறாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சியாமளாதேவி இரண்டாவது பெண் காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … நான் தற்போது தான் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்துள்ளேன் திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுப்பதவர்களின் மீது கடுமையாக சட்டம் பாயும் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன்

மேலும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சா ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும் ஜவ்வாது மலை தொடர் காட்டுப்பகுதிகளில் பொதுமக்கள் இன்றளவும் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக கேள்விபட்டேன் அதையும் கட்டுப்படுத்துவேன். மேலும் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். சட்டவிரோதமாக குற்ற சம்பவங்களில் ஈடுப்பதவர்களின் மீது கடுமையாக சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்..

error: Content is protected !!