Skip to content

டிரம்ப் விதித்த வரி காரணமாக திருப்பூர் தவிக்கிறது

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத்தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது.

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஏற்கெனவே, கடிதத்தில் கூறிய நிவாரணங்களை உடனடியாக அறிவித்து, ஆவன செய்யுங்கள்! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள்! இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து உணர்வுகளைப் பதிவுசெய்த அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு நிர்வாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி! “ என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!