திருவாரூர் மாவட்டத்தில் வரும் 9, 10ம் தேதிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
9ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு, திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து நேராக திருவாரூர் கலைஞர் கோட்டம் சென்று ஓய்வெடுக்கிறார்.
மாலை 4.30 மணிக்கு கலைஞர் கோட்டத்தில் இருந்து பவித்திரமாணிக்கம், தெற்குவீதி வழியாக ரோடு ஷோ மூலமாக பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் திருவாரூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னதி தெருவில் உள்ள இல்லத்திற்கு வந்து தங்குகிறார். மறுநாள்(10ம் தேதி) காலை 10.30 மணிக்கு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.எஸ். நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாவட்டம் முழுவதும் சுமார் 10, 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் திருச்சி வந்து சென்னை செல்கிறார்.