Skip to content

கேரளாவில் ரூ.3 கோடி வழிப்பறி: திருவாரூா் பாஜக நிர்வாகிகள் 2 பேர் கைது

கேரள மாநிலம் ஆலப்​புழா மாவட்​டம் காயங்​குளம் என்ற இடத்​தில் கடந்த ஜூன் 13-ம் தேதி ரூ.3.24 கோடி ரொக்கத்தை நகைக் கடை அதிபர் ஒரு​வரிட​மிருந்து 12 பேர் கொண்ட கும்​பல் வழிப்​பறி செய்​து​விட்​டு, ஆரி​யங்காவு வழி​யாக தமிழகத்​துக்​குள் நுழைந்​து, திருப்​பூர் மாவட்​டத்​தில்  அந்த கும்பல் தலைமறை​வாகி​விட்​டது.

இதுதொடர்​பாக, கேரள மாநிலம் கரியகுளக்​கரை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் விசாரணை நடத்​தி, திருப்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுபாஷ் சந்​திர​போஸ்​(32), திருக்​கு​மார்​(37) உட்பட 7 பேரை கைது செய்​தனர். மேலும், சிலரை போலீ​ஸார் தேடி வந்​தனர்.

இதைத் தொடர்ந்​து, திரு​வாரூருக்கு நேற்று வந்த கேரள போலீ​ஸார், திரு​வாரூர் அருகே கீழக்​கா​வாதுக்​குடி​யில் வசிக்​கும் பாஜக நகர இளைஞரணி தலை​வர் ஸ்ரீராம்​(30) என்​பவரை​யும் இந்த வழக்​கில் கைது செய்​தனர். மேலும், இந்த கடத்​தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, ஸ்ரீராமின் காரை​யும் போலீ​ஸார் பறி​முதல் செய்​து, கேரளா​வுக்கு எடுத்​துச் சென்​றனர்.
error: Content is protected !!