Skip to content

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது.

பின்னர் விநாயகர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதிப்பதற்காக ஊர்வலமாக பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக வந்து  தீக்குண்டம் அமைந்த இடத்திற்கு சென்று பக்தர்கள் அனைவரும்  பூக்குழி  இறங்கி அம்மனை வழிபட்டனர். திருவிழாவை காண பட்டுக்கோட்டை, மதுக்கூர் ,பேராவூரணி, மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம் என ஐம்பதுக்கும்  மேற்பட்ட கிராமமக்கள் வந்து குவிந்தனர்.

error: Content is protected !!