Skip to content

தமிழக கல்வி அமைச்சரின் மகன் தமிழ் படிக்கல…..

  • by Authour

பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

அமைச்சரின் கைகளால் சான்றிதழ்களை பெற்ற மாணவர்களில், அவரது இளைய மகன் கவினும் ஒருவர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இன்டர்நேஷனல் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் கவின், தனது தந்தை கையால் சான்றிதழை பெற்றார். மகனின் தோளை தட்டி அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது,  மொழிப்பாடமாக தான் பிரஞ்சு எடுத்துள்ளதாகவும், தன் தந்தை ஒரு அமைச்சராக சிறப்பாக செயல்படுவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.  எனக்கு கணித பாடம் மிகவும் எளிது.
மகன் சான்றிதழ் பெற்றது குறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த சான்றிதழை வழங்கி தனது இரண்டாவது மகன் கவின் நண்பர்களுடன் சேர்ந்து இந்த சான்றிதழை பெற்றது ஒரு தந்தையாக  பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

இருமொழி கொள்கையில் உறுதியாக இருக்கும் திமுக  அரசில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகனே  தமிழ் மொழியை தவிர்த்து,  பிரஞ்சு மொழி  எடுத்து படிப்பது  மக்கள் மத்தியில்  பேசுபொருளாக மாறி உள்ளது.  தமிழ் தமிழ் என்று பேசும் அரசில் முக்கிய துறையை வகிக்கும் ஒரு அமைச்சரின் மகனே  தமிழை  படிக்காமல் பிற மொழியை படிக்கிறார். அப்படியானால் தமிழ் மொழி ஏழைகள்  மட்டும் படிப்பதற்கான மொழியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!