Skip to content

பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட எடப்பாடி…. பொதுமக்கள் கண்டனம்

அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7ம் தேதி  தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இரண்டாவது நாளான நேற்று  கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.  நேற்று  மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்  எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

“கோயிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் எல்லாம் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத் துறைக்கு போய் சேர்கிறது. கோயிலை அபிவிருத்தி செய்து, விரிவுப்படுத்துவதற்குத்தான் நீங்கள் பணம் போடுகிறீர்கள். ஆனால் அந்த பணத்தை எடுத்துக் கல்லூரி கட்டுகிறார்கள்.

எடப்பாடியின் இந்த பேச்சுக்கு தமிழ் நாட்டில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொதுமக்கள், மாணவ, மாணவிகள்  எடப்பாடியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.  வழக்கமாக  பாஜகவினர் தான் இப்படி பேசுவார்கள். அதிலும்  குறிப்பாக ஹெச் . ராஜா போன்ற வர்கள் தான் இந்த வாசகத்தை பயன்படுத்துவார்கள்.

ஆனால் எடப்பாடி இப்போது பாஜகவின் ஊதுகுழலாக மாறி  கோவில்  பணத்தை கல்லூரி கட்டுவதா என்று  தமிழக அரசை பார்த்து கேட்டு உள்ளார்.  இந்த கேள்வியை பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் இதுவரை கேட்டதில்லை. அந்த அளவுக்கு பாஜகவின் குரலாக மாறிவிட்டடி  எடப்பாடிக்கு தமிழக மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் உண்மை.

இப்படி ஒவ்வொரு துறையும்  தனது வருமானத்தை தன் துறைக்கே  பயன்படுத்திக்கொள்வதாக இருந்தால்,  வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை தொழில்துறை தவிர மற்ற துறைகளை இழுத்து மூடிவிடலாமா,  போக்குவரத்து துறை, மின்துறை நட்டத்தில் இயங்குவதால் அந்த துறைகளை மூடலாமா என்பதை எடப்பாடி தான்  மக்களுக்கு விளக்க வேண்டும் என தமிழக மக்கள் சமூக வலைதளங்களில் எடப்பாடியை  வசை மாரி பொழிந்தனர்.எடப்பாடிக்கு  இசட் பிளஸ் பாதுகாப்பு மத்திய அரசு கொடுத்ததால், எடப்பாடி பாஜகவில் சேர்ந்து விட்டாரோ என்றும்,  கையில் எலுமிச்சை பழங்களுடன் இவர் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தும் பலர்  எடப்பாடிக்கு கண்டனம்  தெரிவித்து உள்ளனர்.

இதனால் பயந்துபோன அதிமுக  ஐடி விங், தனது   எக்ஸ்தள பக்கத்தில்,  எடப்பாடி பேச்சுக்கு சப்பை கட்டு கட்டி உள்ளனர்.  அரசிடம் பணம் இல்லையா என்பதற்கு தான் எடப்பாடி அந்த கேள்வியை கேட்டார் என்று விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!