9வது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 1 மாதமாக நடந்து வந்தது. கோவை, சேலம், நெல்லை, நத்தம் ஆகிய 4 இடங்களில் இந்த போட்டி நடந்தது. மொத்தம் 8 மணிகள் இதில் பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நத்தத்தில் இறுதிப்போட்டி நடந்தது- டாஸ்வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. திருப்பூர் அணி முதலில் பேட்டி செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் சேர்த்தது.
அதைத்தொடர்ந்து ஆடிய திண்டுக்கல் அணி 14.4 ஓவர்களில் 102 ரன்களில் சுருண்டது. திருப்பூர் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திருப்பூர் அணி முதன்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்றது. அந்த அணிக்கு ரூ-50லட்சம் பரிசு வழங்கப்பட்டது- 2ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.30 லட்சம் பரிசாக கிடைத்தது-