தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்திற்கான இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர்கள் அனைவரும் அவர்களுடைய ஒரு முறை பதிவுதளத்தின் (OTR DASHBOARD) மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குடிமை பணிகளில் (தொகுதி 2 மற்றும் 2ஏ பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகை தேர்வானது, செப்டம்பர் 28-ந்தேதி முற்பகலில் நடைபெற உள்ளது என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.