இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து கிராம் ரூ.171-க்கும், ஆயிரம் ரூபாய் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம்-வெள்ளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.