ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா – இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதன் காரணமாகவும், ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துள்ளதன் காரணமாகவும் தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருகிறது.
தங்கம் விலை நடப்பு ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஜனவரி தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை புது உச்சத்தினை தொட்டு வந்தது. தற்போது இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் ரூ.98,960 ஆக அதிகரித்து உச்சம் தொட்டுள்ளது..
நேற்று வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை இன்று(டிச.13) மாற்றமின்றி கிராம் ₹12,370-க்கும், சவரன் ₹98,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.210க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.6,000 குறைந்து கிலோ ரூ.2.10 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

