Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.950 குறைவு

ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.

அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி சற்று குறையும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே, தங்கம் விலை கிராமுக்கு ரூ.275-ம், பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 200-ம் குறைந்திருந்தது.

22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.13,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.300க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!