மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் அன்புடையீர், வணக்கம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை, மே 28-ஆம் தேதி (28.05.2025), புதன்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. காலை 9 மணிக்குத் துவங்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.