Skip to content

ஆந்திராவில் நள்ளிரவில் சோகம்: பேருந்து – லாரி மோதி தீ விபத்து; 3 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் சிரிவெல்லா அருகே இன்று அதிகாலை நேரிட்ட கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் வோல்வோ பேருந்து, சிரிவெல்லமெட்டா அருகே வந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிரே வந்த கொள்கலன் லாரி மீது பலமாக மோதியது.

மோதிய வேகத்தில் பேருந்தும் லாரியும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். பேருந்தில் தீ வேகமாகப் பரவியதால் பயணிகள் அலறினர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு, பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டார். ஜன்னல் வழியாகக் குதித்ததில் 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் நந்தியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!