நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரவிச்சந்திரன்(43).இவருக்கு மதுப்பழக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்தி வந்தார். இதனால் குடும்பம் நடத்த இயலாமல் தவித்த அவரது மனைவி கணவர் என்றும் பாராமல் ரவிச்சந்திரனை வீட்டிலிருந்து வெளியே துரத்தினார்.
பின்னர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட ரவிச்சந்திரன் வேறு வழி இல்லாமல் திருச்சி தெற்கு காட்டூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தனது தாய் வீட்டுக்கு வந்தார். மகனுக்கு அவர் அடைக்கலம் கொடுத்தார்.
இருப்பினும் மனைவி தன்னை துரத்திய கவலையில் இருந்த ரவிச்சந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென. தாய் வீட்டில் பேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது அண்ணன் மகன் அஜித்குமார் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியால் துரத்தப்பட்ட தொழிலாளி தனது தாய் வீட்டில் திடீரென தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

