Skip to content

முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2) நேற்று இரவு வீட்டில் இருந்த சிறுமி ஹாரிவர்த்தினி தனது சகோதிரியுடன் முந்திரி சாப்பிட்டுக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஹரிவர்த்தினி முச்சுத் திணறலில் கஷ்டப்படுகிறாள். அடுத்த சில நெடிகளில் சிறுமி மயங்கி விழுந்தாள். இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் உடனடியாக மகளை மீட்டு கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசேதனை செய்தபோது ஏற்கனவே சிறுமி ஹரிவர்த்தினி மூச்சித் திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமி அதிகமாக முந்திரி சாப்பிட்டதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!