Skip to content

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதி சிலைக்கு மரியாதை…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சி மத்திய, வடக்கு திமுக வினர் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் உருவ சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மாநகர மேயர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
இந்நிகழ்வில் மாணவரணி இன்ஜினியர் ஆனந்த், மாவட்ட பொருளாளர் துரைராஜ், அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம்,மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ்,மத்திய மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர்,ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்த நல்லூர் கதிர்வேல்,பகுதிச் செயலாளர்கள் கமால் முஸ்தபா,மோகன்தாஸ்,ராம்குமார்,இளங்கோ,காஜாமலை விஜய்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,திருச்சி மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்க்காதேவி,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,
மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம் வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன் குமார்,மீனவர் அணி முள்ளிப்பட்டி பால்ராஜ்,மாநகர துணை செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி,மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி,சோழன் சம்பத், மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, மஞ்சுளா பாலசுப்பிரமணியன்,புஷ்பராஜ், ராமதாஸ்,வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ்,புத்தூர் பவுல்ராஜ்,மார்சிங் பேட்டை செல்வராஜ்,தனசேகர்,நிர்வாகிகள் அரவானூர் தர்மராஜன்,ராம்ஜி குணா,எம்.ஆர்.எஸ்.குமார், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்..இதேபோல் திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர பேரூர், பகுதிக்கழக, வட்டக் கழகங்களில் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

error: Content is protected !!