Skip to content

தஞ்சை மாமன்னர் 2ம் சரபோஜியின் சிலைக்கு மரியாதை

தஞ்சை மாமன்னர் இரண்டாம் சரபோஜியின் 248 வது பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை ஆண்ட மாமனார் இரண்டாம் சரபோஜி 248 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி தஞ்சாவூர் அரண்மனை தர்பார் மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, மாவட்ட எஸ்பி ராஜாராம், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து சங்கீத மகாலில் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் ஆய்வு மையம் சார்பில் நூல்கள் வெளியிட்டு நிகழ்ச்சி நடந்தது. சரசை மகள் நூலக நிர்வாக அலுவலர் ஆனந்த் கணேசன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசினார். தஞ்சாவூர் எம்பி முரசொலி முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து ஒன்பது புதிய நூல்கள் மற்றும் மறு பதிப்பு நூல்கள் ஏழு எண்ணிக்கையில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் ஆகியோர் வெளியிட்டனர்.இதை nடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் தமிழ் பல்கலைக்கழகம் தென்னக பண்பாட்டு மையம் சத்திரம் நிர்வாகம் மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கலை பண்பாடு துறை ஆகியவை இணைந்து செய்திருந்தன.

error: Content is protected !!