Skip to content

தஞ்சையில் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மரியாதை….

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சையில் மத்திய மாவட்டம், மாநகரம் தி.மு.க சார்பில் கீழவாசலில் இருந்து மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு கருணாநிதியின் முழு உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, செல்வம், மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாவட்ட

பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்டத் துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, மாநகர செயலாளரும் மேயருமான சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், மகளிர் அணி, தொண்டர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!