Skip to content

திருச்சியில் +2 மாணவி மாநிலத்தில் 3வது இடம் …. பாராட்டு…

நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஸ்ரீநிதி என்ற மாணவி மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 3 பாடப்பிரிவில் நூற்றுக்கு நூறும் மற்ற மூன்று பாடங்களில் தலா 99 மதிப்பெண்கள் பெற்று வெற்றி மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சைலஜாவின் மகள் ஸ்ரீநிதி (17) இவர் நம்பர் ஒன் டோல்கேட் அருகே இயங்கி வரும் ஸ்ரீ பால வித்யா மந்திர் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவு படித்து வருகிறார். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழில் 99 ஆங்கிலம் 99 இயற்பியல் 100 வேதியல் 100 கணினி 100 மற்றும் கணித பாடப்பிரிவில் 99

மதிப்பெண்கள் என 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண் பெற்று திருச்சி மாவட்டத்தில் முதல் இடத்தையும் மாநிலத்தில் 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பள்ளி அறங்காவலர்கள் ரவீந்திரன், மனோகர் பள்ளி தாளாளர் தர்மராஜ், தலைமை ஆசிரியர் கலையரசன் உள்ளிட்டோர் மாணவி ஸ்ரீநிதி மற்றும் தாய் சைலஜாவிற்கு பொன்னாடை போற்றி கௌரவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஸ்ரீநிதிக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!