மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராகவும் சட்டமன்ற கொறடாவாக இருந்தவர் மனோகரன். ஜெ மறைவிற்கு பின்னர் உருவான அமமுகவில் மாநில பொருளாளராக இருந்த மனோகரன் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த வெல்லமண்டி நடராஜன் ஒபிஎஸ் அணியில் இருப்பதால் அந்த பதவியிடம் காலியாக உள்ளது. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் யார்? என்பது குறித்து முன்னாள் துணை மேயர் சீனிவாசன், ஆவின் சேர்மன் கார்த்திகேயன், முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில் மனோகரன் அதிமுகவில் இணைந்து இருப்பதால் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
திருச்சி அரசியலில் திடீர் திருப்பம்… அமமுக பொருளாளர் மனோகரன் அதிமுகவில் சேர்ந்தார்..
- by Authour

Tags:அமமுக
