திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் சேர்ந்தவர் சதீஷ்குமார் (38). இவர் கடந்த 11 ந்தேதி தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி -சென்னை பைபாஸ் காவிரி ஆறு பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் இடதுபுறமாக திரும்பும் போது அந்த வழியாக வந்த காரை முந்தி சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த காரில் இருந்தவர் கீழே இறங்கி வந்து சதீஷ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி உள்ளார். தொடர்ந்து சதீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் இருந்த டிரில்லிங் மெஷின் கட்டிங் மெஷின் ஹெல்மெட் அவரது செல்போன் மற்றும் 3000 ரூபாய் அவரது வண்டி ஆகியவற்றை பறித்து சென்றார். இதுகுறித்து சதீஷ்குமார் கோட்டை போலீஸ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

