கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணையில் இருந்து காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 27,106 கன அடி நீர் வந்து வந்து கொண்டிருந்த நிலையில் நீர் வரத்து அதிகரித்து இன்று
காலை நிலவரப்படி 98,934 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் காவிரி ஆற்றில் 97,464 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. மாயனூர் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று பகல் 12 மணி அளவில் இந்த தண்ணீர் முக்கொம்பு வந்தது. முக்கொம்புக்கு அதிகமான தண்ணீர் வருவதால், முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்க வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இ்று மாலை மேலும் அதிகாிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.