Skip to content

திருச்சி மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் உலகநீதி (58). வடுவூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 31.03.2021 முதல் திருச்சி மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்குத் தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உலகநீதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தீபிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!